ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் வாயு கசிவு; ஐவர் வைத்தியசாலையில்

0
534
Gas leak Horana rubber factory Five people hospitalized

ஹொரணை வகவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட அமோனிய வாயு கசிவினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (Gas leak Horana rubber factory Five people hospitalized)

இந்த தொழிற்சாலையில் எரிவாயு சிலிண்டர்களை லொறியில் இருந்து இறக்கிய போது அதில் இருந்து கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்த கசிவு காரணமாக ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Gas leak Horana rubber factory Five people hospitalized