றக்குவானை துப்பாக்கிச் சூட்டில் இரு பிள்ளைகளின் தந்தை பலி

0
302
father two children killed fire

றக்குவாணை வடக்கு பனாபிட்டிய பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்டுள்ள துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். father two children killed fire

நேற்று இரவு 8 மணி முதல் 8.30 மணிக்கிடைப்பட்ட வேளையில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த குறித்த நபர் வௌியில் மின்குமிழை சரி செய்ய சென்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது குறித்த நபர் காயமேற்பட்டு விழுந்திருந்ததையடுத்து கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமோ சந்தேக நபரோ இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று றக்குவானை பொலிஸார் தெரிவித்தனர்.

tags :- father two children killed fire

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites