பிரியாணி காதலை தொடர்ந்து கேரளாவில் இன்னோர் கள்ள காதல் ..

0
698
Kerala Girl illegal Activities

பிரியாணி கள்ள காதலை தொடர்ந்து  கேரளாவை உலுக்கிய கள்ள காதல் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது .  (Kerala Girl illegal Activities  )

கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் மனு (வயது 27). மெக்கானிக். இவருக்கும் கோட்டயத்தை சேர்ந்த மீனு (22) என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. முறைப்படி இருவரும் திருமணம் செய்தனர். 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

சம்பவத்தன்று காலை மனு வேலைக்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் மனைவி செல்போனில் மனுவை அழைத்தார். அப்போது மீனு பேசும்போது தன்னையும், மகனையும் ஒரு கும்பல் கடத்த வீட்டுக்குள் புகுந்து கழுத்தில் கத்தியை வைத்து அறுப்பதாக கூறி முடிக்கும் முன்பே இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் கழுத்து அறுக்கப்பட்டது போன்ற போட்டோ அவரின் வாட்ஸ் அப்புக்கு வந்தது.

அதிர்ச்சியடைந்த மனு போலீசாருடன் வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது ரத்தக்கறை ஆங்காங்கே சிதறி கிடந்தது. போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது ரத்தம் குறித்து சந்தேகம் ஏற்பட்டது.

அதில் தண்ணீர் ஊற்றி பார்த்தபோது அது ரத்தம் இல்லை. குங்குமம் என்று தெரிந்தது.

இதனால் மீனுவின் மீது போலீசாரின் சந்தேகப் பார்வை திரும்பியது.

மீனுவின் செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசாருடன் அவரை பிடிக்க திட்டமிட்டனர். இந்நிலையில் அவர் கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் இருப்பதாக தெரியவந்தது.

அங்கு சென்ற போலீசார் மீனு, அவரது மகன் மற்றும் அவருடன் இருந்த வாலிபர் பினு என்ற வாலிபரையும் பிடித்தனர். 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல தகவல்கள் வெளியானது. காதல் திருமணம் செய்து குடும்பம் நடத்திய மீனுவுக்கும் அதே பகுதியை சேர்ந்த பினு (22) என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போக திட்டமிட்டனர்.

அதற்கான சமயம் எதிர்பார்த்த நிலையில் ஒரு கும்பல் கடத்தியதாக நாடகமாடலாம் என்று திட்டம் வந்தது. சம்பவத்தன்று கணவருக்கு போன் செய்து கும்பல் கழுத்தை அறுத்து கடத்தி விட்டதாக கூறிவிட்டு மகனுடன் கள்ளக்காதலன் பினுவின் காரில் தப்பிச்சென்றது தெரியவந்தது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனு மற்றும் கள்ளக்காதலன் பினு ஆகியோரை கைது செய்தனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பல வருடங்களிற்கு முன் கணவனை பிரிந்த பிரபல நடிகைக்கு 5 வயதில் குழந்தை… (புகைப்படம் உள்ளே)!
பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
எமது ஏனைய தளங்கள்
Keyword:Kerala Girl illegal Activities