பரீட்சையில் சித்தியடைவதைப் போன்றே வாழ்க்கையிலும் மாணவர்கள் சித்தியடைய வேண்டும்!

0
683
Students live way pass exam

{ Students live way pass exam }
மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைவதைப் போன்றே தமது வாழ்க்கையையும் வெற்றிகொள்வதற்கான அறிவினை பெற்றுக்கொள்ளக்கூடியவாறு பாடவிதானங்கள் அமையவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை – கொடவாய மகா வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலவசக் கல்வியினால் அதிகளவிலான கல்விமான்களையும், புத்திஜீவிகளையும் உருவாக்கி வரும் இந்த நாட்டில், மாணவர்கள் தமது வாழ்க்கையை வெற்றிகொள்வதற்கான அறிவினைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பாக மிக மோசமான நிலைமையே காணப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கும் மிக மோசமான அனுபவங்களை தடுத்தல் தொடர்பாக கல்விமான்கள் முன்னோடிகளாக செயற்பட வேண்டும்.

பெற்றோர்களைப் போன்று ஆசிரியர்களும் இந்த விடயத்தில் கவனத்துடன் செயற்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Tags: Students live way pass exam

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites