சுழிபுரத்தில் மீனவரின் வலையில் சிக்கிய அரிய வகை உயிரினம்

0
655

யாழ்ப்பாணம் – சுழிபுரம் – சவுக்கடி கடற்பகுதியில் அரிய வகை உயிரினம் ஒன்று மீனவரின் வலையில் சிக்கியுள்ளது. (Rare creature Jaffna)

சுழிபுரத்தைச் சேர்ந்த முருகானந்தன் என்ற மீனவர் இன்று அதிகாலை தொழிலுக்குச் சென்று தனது மீன் வலையை இழுத்துள்ளார்.

எனினும் வலையின் எடை கனமாக இருந்துள்ளதனால் அதனை நன்றாக அவதானித்த போது, சிறுத்தைப் புலி போன்ற உயிரிழனம் ஒன்று காணப்பட்டுள்ளது.

அதனைக் கரைக்கு கொண்டு வந்த குறித்த மீனவர், சக மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் அறிவித்தார்.

கடற்படையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், அவர்களால் வன உயிரினங்கள் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவரின் வலையில் சிக்கிய உயிரினம் சருகுபுலி என்றும் தெரியவந்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Rare creature Jaffna