யாழில் அய்யூப் அஸ்மீனின் கொடும்பாவி எரிப்பு!

0
420

இன்றைய தினம் (7) யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முஹீதீன் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகையின் பின்னர் ஒன்று கூடிய முஸ்லிம்கள் குறித்த மாகாண சபை உறுப்பினர் அண்மைக்காலமாக யாழ் முஸ்லிம் மக்கள் தொடர்பாக தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொடும்பாவி எரிப்பில் ஈடுபட்டனர். North Provincial Council Member Ayub Asmin Effigy Set Burn Tamil News

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் கொடும்பாவி இரண்டாவது முறையாகவும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களினால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது.

இதன் போது இப்போராட்டத்தில் பங்கு பற்றிய மக்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினரனின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைவதை இட்டு மீண்டும் தனக்கான அரசியலை மேற்கொள்ள வட பகுதி முஸ்லிம் மக்கள் குறித்து முன்னுக்குப் பின்னாக முரணான கருத்துக்களை நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டினர்.

எனவே மாகாண சபை உறுப்பினர் இவ்வாறான விடயங்களை தவிர்த்து கொள்ளவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites