ஆலோசகர் பதவியிலிருந்து டிராவிட் விலக காரணம் ரவி சாஸ்திரியே..!: கங்குலி அதிர்ச்சி தகவல்

0
341
rahul dravid left Indias batting consultant job

rahul dravid left Indias batting consultant job
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை இழந்துவிட்டது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்ததால் இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

ஷேவாக், முன்னாள் கேப்டன் கங்குலி ஆகியோர் அவரை நேரடியாகவே விமர்சனம் செய்தனர். இந்திய அணியின் பேட்டிங் சீர்குலைவுக்கு ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்று கங்குலி சாடி இருந்தார். rahul dravid left Indias batting consultant job, tamil sports news,news tamil,ind vs eng

இந்த நிலையில் ரவி சாஸ்திரியுடன் பேசிய பிறகே பேட்டிங் ஆலோசகரில் இருந்து ராகுல் டிராவிட் விலகினார் என்று கங்குலி அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு உள்ளார். கிரிக்கெட் ஆலோசனை குழுவில் இடம் பெற்று இருந்த தெண்டுல்கர், கங்குலி,வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் ரவிசாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்தனர். பின்னர் வெளிநாட்டு பயணங்களில் டிராவிட்டை பேட்டிங் ஆலோசகராகவும், ஜாகீர்கானை பந்து வீச்சு ஆலோசகர்களாகவும் நியமிக்க பரிந்துரை செய்தனர்.ஆனால் கிரிக்கெட் வாரியத்தை நிர்வகித்து வரும் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட குழுவானது ரவி சாஸ்திரி நியமனத்தை மட்டுமே உறுதி செய்தது.

இது தொடர்பாக கங்குலி தற்போது கூறியதாவது:-

பேட்டிங் ஆலோசகராக இருக்குமாறு ராகுல் டிராவிட்டை கேட்டுக் கொண்டோம். அவரும் அதை ஒப்புக் கொண்டார்.ஆனால் ரவிசாஸ்திரியிடம் பேசிய பிறகு அவர் பேட்டிங் ஆலோசகரில் இருந்து விலகினார். என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை. பி.சி.சி.ஐ.யின் நிர்வாக குழுவும் பயிற்சியாளர் தேர்வில் குழப்பத்தை விளைவித்தது. இதனால் நாங்கள் சோர்வடைந்தோம். அதன் பின்னர் நாங்கள் அதில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

rahul dravid left Indias batting consultant job

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news