ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ”சர்கார்” படம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.Sarkar movie latest update Tamil film
அதாவது, ”துப்பாக்கி”, ”கத்தி” திரைப்படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் இணையும் திரைப்படம் “சர்கார்”. இப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. தீவிர அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விஜய் படம் என்றால் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகுவது வழக்கம். ஆனால் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கே பலரின் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில், இப் படத்தின் படப்படிப்பு முடிந்ததாகவும், தீபாவளிக்கு பட்டாசை தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என்றும் வரலட்சுமி சரத்குமார் மகிழ்ச்சி பொங்க தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், “சர்கார்” படத்தின் பாடல் வருகிற அக்டோபர் 2 ஆம் திகதியன்று வெளியாகவுள்ளது.
<<MOST RELATED CINEMA NEWS>>
* ராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..!
* விஷாலுக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!
* காதலியைப் பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டை விட்டு ஓடிய டேனியல்..!
* காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா : காரணம் இது தானாம்..!
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு கோடிக்கணக்கில் நிதி வழங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்..!
* சீமராஜா ட்ரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு..!
* கர்ப்பமான சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்..!