காஜலின் அடுத்த படம் இந்த மொழியிலா??

0
442

‘பழனி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். தமிழ் திரைப்படங்களில் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.Kajal Agarwal Next Language Movie

காஜல் அகர்வால் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த படம் ‘மெர்சல்’. தற்போது காஜல் அகர்வால் ‘பாரிஸ் பாரிஸ்’ மற்றும், ரமேஷ் அரவிந்த் இயக்கும் ‘குயின்’ எனும் ஹிந்தி பட தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை பானு ஷங்கர் இயக்கவுள்ளார். காஜலுக்கு பானு ஷங்கர் கூறிய கதை மிகவும் பிடித்து விட்டதால், முழு ஸ்க்ரிப்டையும் முடித்து கொண்டு வருமாறு கூறியுள்ளாராம்.

Tag: Kajal Agarwal Next Language Movie

எமது ஏனைய தளங்கள்