ஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு 8 ஆண்டுகால சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.Hacker Arrest Hollywood Actress Private Photos
ஹாலிவுட் திரையுலகில் பிரபல நடிகைகளாக வலம் வந்த ஜெனிபர் லாரன்ஸ், கிர்ஸ்டென் டன்ஸ்ட், கேட் அப்டன் உள்ளிட்ட பல நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் கடந்த 2014-ம் ஆண்டு ஹேக்கர்களால் திருடப்பட்டு இணையத்தில் கசியவிடப்பட்டன.
சினிமா திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, அமெரிக்காவின் நார்த் பிரான்போர்டு பகுதியை சேர்ந்தஜார்ஜ் காரோபேன் என்ற இளைஞருடன் சேர்த்து 4 பேர் கைது செய்யப்பட்டனர்
இது தொடர்பில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஆப்பிள் கணக்கு பாதுகாப்பு துறையிலிருந்து பேசுவதை போல் ஈமெயில் அனுப்பி கடவுச்சொல்லை நடிகைகளிடம் இருந்து பெற்றுள்ளனர்.
மேலும் இதுபோன்று நடிகைகளிடம் இருந்து பெற்ற கடவுச்சொல்லை கொண்டு, ஹாலிவுட் பிரபலங்களின் 200 ஐகிளவுடு கணக்குகளை ஹேக் செய்துள்ளது தெரியவந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடந்தது. அப்பொழுது விவாதத்தை முழுவதுமாக கேட்ட நீதிபதி, குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதில் 3 ஆண்டுகளுக்கு குற்றவாளி சமூக சேவை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
<<MOST RELATED CINEMA NEWS>>
* ராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..!
* பிரபுதேவாவின் புதிய பட டைட்டில் அறிவிப்பு..!
* ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!
* காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா : காரணம் இது தானாம்..!
* என்.ஜி.கே படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிவைப்பு : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
* நான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..!
* கர்ப்பமான சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்..!