சிங்கள குடியேற்றங்களுக்கு எதிரான பிரேரணைகள் வட மாகாண சபையில் ஏற்பு!

0
482
three amenmnets accepted Northern Provincial Council Thuvikaran

(three amenmnets accepted Northern Provincial Council Thuvikaran)

வடக்கில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் குறித்து, வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனால் கொண்டு வரப்பட்ட மூன்று பிரேரணைகள் வடக்கு மாகாண சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வட. மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, மாகாண சபை உறுப்பினர் உரையாற்றுகையில், “தமிழர் நிலங்களில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இதுவரை சட்டத்திற்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் தற்போது முல்லைத்தீவு உட்பட ஏனைய நான்கு மாவட்டங்களிலும் இடம்பெறுகின்றன.

அந்த சிங்கள மயமாக்கல் முன்னெடுப்புகளையும் தகுந்த வல்லுநர் குழாம் ஒன்றை நிறுவி அவர்களின் ஊடாக ஆவணப்படுத்த வேண்டும்.

அந்த ஆவணப்படுத்தல் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் சிங்கள மயமாக்கல் தொடர்பான வட மாகாண சபையின் உத்தியோகபூர்வ ஆவணமாக இருத்தல் வேண்டும்.

தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில் தமிழ் மக்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் குடியேற்றங்களை உடன்நிறுத்த வேண்டும் என்ற எமது அழுத்தமான கருத்தினை அரசாங்கத்துக்கு உரிய வகையில் தெரியப்படுத்துதல்.

முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படவிருக்கும் சட்டத்திற்கு புறம்பான மாயபுர குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் முகமாக வடக்கு மாகாண சபையை சார்பாக்கும் அனைத்து மாகாணசபை உறுப்பினர்களும் குறித்த இடத்திற்கு வருகை தந்து தொடரும் சிங்கள மயமாக்கலை எதிர்த்து வலிமையான கண்டனங்களை தெரிவிக்கும் வகையில் ஒருநாள் கவனயீர்ப்பை மேற்கொள்ளவேண்டும்” ஆகிய மூன்று விடயங்களை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குறித்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற மாவை சேனாதிராஜா ஆகியோர் தொடர்ச்சியாக அரசுடன் பேசி வருகிறார்கள். ஆகவே ஆக்கபூர்வமான தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

(three amenmnets accepted Northern Provincial Council Thuvikaran)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites