(Two close associates Makandure Madush arrested firearms Tamil News)
ஹோமாகம பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹோமாகம மற்றும் பண்டாரகம பிரதேசங்களில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹோமாகம பிரசேத்தைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தன விதாரனகே மற்றும் பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நிரோசன் துஷார ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்படும் தருணத்தில் அவர்களிடம் இருந்து டி 56 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் இருவரும் பிரபல பாதாள உலக குழுத்தலைவன் மாகந்துரே மதூஷின் நெருங்கிய சகாக்கள் என்றும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து செப்டம்பர் 04 ம் திகதி வரை தடுத்து வைக்க உத்தரவிடப்படுள்ளது.
(Two close associates Makandure Madush arrested firearms Tamil News)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யுத்தத்தில் அங்கவீனமடைந்த பிரிகேடியர்களுக்கு பதவி உயர்வு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு
- மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்
- அய்ஸ் போதைப் பொருளுடன் நபரொருவர் கைது
- ‘தமிழனே விழித்திடு மகாவலியை எதிர்த்திடு’; முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்
- தேசிய அடையாள அட்டைகள் கட்டணத்தில் திருத்தம்
- கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் தடம்புரண்டதில் இளைஞன் பலி
- மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது: மர்ம நபர்களினால் தாக்கப்பட்ட பூங்காவின் அதிகாரிகள்!
- கலஹா வைத்தியசாலையில் பதற்றம்; குழந்தை உயிரிழந்த சம்பவம்
- நானுஓயா டெஸ்போட் பகுதியில் தீ: கடை முற்றாக எரிந்து சாம்பல்