`இமைக்கா நொடிகள்’ காட்சிகள் ரத்து…!

0
295
Imaikka nodikal movie shows cancelled, Imaikka nodikal movie shows, Imaikka nodikal movie, Imaikka nodikal movie download, Imaikka nodikal free download, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News, tamil movie news, new tamil movie news

நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும், நயன்தாராவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளனர்.Imaikka nodikal movie shows cancelled

பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு ‘ருத்ரா’ எனும் வில்லன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் இன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் அறிவித்த படி படம் வெளியாகாமால், காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

படத்தின் மீதான நிதி பிரச்சனையால் படத்தின் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டும், சிங்கப்பூரில் படத்திற்கான புக்கிங் தொடங்கவில்லை என்றும் ட்விட்டரில் வெளிநாட்டு வாழ் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

எனவே பணப் பிரச்சனை தீர்க்கப்பட்டதும், இன்றே படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ள இந்த படத்தை ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீநிவாசன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயக்குமார் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

Tag: Imaikka nodikal movie shows cancelled

எமது ஏனைய தளங்கள்