கமல் மீது சொல்லப்பட்ட இரு குற்றசாட்டுகளுக்கும் கமல் சனிக்கிழமை பதில் அளித்துள்ளார். அதாவது கமல் பிக்பாஸிற்காக போலியாக கோபப்பட்டார் என்பதும், மகத், ஐஸ்வர்யா, யாஷிகா ஆகியோர் என்ன அட்டூழியம் செய்தாலும் கமல் கண்டுகொள்ளவதே இல்லை என்பதும் தான் அந்த குற்றசாட்டுகள்.
சனிக்கிழமையன்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் உண்மையாகவே கோபப்பட்டார். மகத், யாஷிகா, ஐஸ்வர்யாவை பாரபட்சம் இல்லாமல் வறுத்தெடுத்தார் கமல். மகத், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோரை கமல் இந்த அளவுக்கு கண்டித்தது இதுவே முதல்முறை ஆகும்.
அதேநேரம் கமல் மும்தாஜை டார்கெட் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. அதனால் மும்தாஜை பாராட்டித் தள்ளி அந்த குற்றச்சாட்டையும் போக்கியுள்ளார். மகத் செய்த அட்டகாசத்துக்கு மும்தாஜ் பதிலுக்கு எதுவும் சொல்லாமல் பொறுமையாக இருந்ததை பாராட்டினார். கமல் பாராட்டியதை கேட்டு பார்வையாளர்கள் கைதட்டினார்கள்.
இதை விட ‘பிக் பாஸ் முதல் சீசனில் இருந்தவர்களின் அறிவு மட்டம் அதிகம்’ என்றும் தற்போது உள்ளவர்களுக்கு அப்படி இல்லை என்றும் கமல் கோபத்துடன் தெரிவித்தார். மனிதர் அந்த அளவுக்கு கோபத்தில் இருந்துள்ளார் போன்று. தன் மீதான அனைத்து புகார்களுக்கும் ஒரே நாளில் பதிலளித்துவிட்டார் கமல்.