மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட வேண்டும் – சுப்ரமணிய சுவாமி

0
657
Mahinda awarded Bharat Ratna like Mandela Swamy Subramanian

(Mahinda awarded Bharat Ratna like Mandela Swamy Subramanian)

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, மண்டேலாவைப் போன்று ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட வேண்டும் ராஜ்ய சபா உறுப்பினரும், மூத்த அரசியல்வாதியுமான சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

சுப்ரமணிய சுவாமி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் புதிதாக பதிவிட்டுள்ள குறிப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷ, புதுடில்லிக்கு அடுத்து வரும் போது அவருக்கு இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஏற்கனவே டில்லியில் இடம்பெற்ற ‘விராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின்’ நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு மஹிந்தவுக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்ட சுப்ரமணிய சுவாமி, “மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் வாரத்தில் டெல்லிக்கு விஜயம் செய்வார்’ என்ற செய்தி ஆங்கில பத்திரிகையில் வௌியாகியுள்ளதை மேற்கோட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ டில்லிக்கு ஒரு விருந்தாளியாக வரவில்லை என்றும், அவர் ஒரு சம்பிரதாய பூர்வமான நபர் என்றும் சுப்ரமணிய சுவாமி கூறினார்.

(Mahinda awarded Bharat Ratna like Mandela Swamy Subramanian)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites