(not planning remove military force Sinhala Maha Vidyalaya)
சிங்கள மகா வித்தியாலயத்தில் இயங்கும் இராணுவ படை முகாமை அகற்றமாறு கோரும் திட்டம் தமக்கு இல்லை என்று யாழ்ப்பாண சிங்கள மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க தலைவர் கெனடி சேவியர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1956 ஆம் ஆண்டு தனி சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பின்னர் 1965 ஆம் ஆண்டு சிங்கள மகாவித்தியாலயம் யாழ்பாணத்தில் நிறுவப்பட்டது.
அன்று முதல் 1985 ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில் யாழ்ப்பாணத்தில் குறித்த பாடசாலை இயங்கி வந்துள்ளது. 1985 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாடசாலை மூடப்பட்டது.
இந்த நிலையில் குறித்த பாடசாலை கட்டடத்தில் தற்போது இராணுவத்தினர் தமது 512 படைப்பிரிவின் பாரிய முகாமை அமைத்துள்ளனர்.
தற்போது மீளவும் குறித்த பாடசாலையினை ஆரம்பிக்க வேண்டும் என பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிங்கள மகா வித்தியாலய கட்டத்தில் இயங்கும் இராணுவத்தினரின் 512 படைத்தளத்தை அகற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளீர்களா என பழைய மாணவர் சங்க தலைவர் கெனடி சேவியரிடம் ஊடகவியலாளர்கள் வினவினர்.
இராணுவ முகாமை அகற்றும் சிந்தனை எம்மிடம் இல்லை. எமக்கு இராணுவ முகாம் அவசியம். முதற்கட்டமாக வாடகைக்கு இடத்தினை பெற்று ஆரம்ப பிரிவினை நடாத்தவே எண்ணியுள்ளோம்.
பாடசாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியுடன் பேசி இருந்தோம். அதனை கேட்டு அவர் மிகுந்த சந்தோசம் அடைந்தார். தன்னால் இயன்ற உதவிகளையும் தேவைகளையும் வழங்க உடன்பட்டுள்ளார்.
முதற்கட்டமாக பாடசாலையை ஆரம்பித்து முன்னேற்றத்தை காட்டிய பின்னர் எமது தேவைகளை கல்வித்திணைக்களத்திடம் கோரி பெற்றுக்கொள்வோம்’ என தெரிவித்துள்ளார்.
(not planning remove military force Sinhala Maha Vidyalaya)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்