வவுனியாவில் வங்கி ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கைது

0
250
vavunia badulla bus conductor attack three person include bank staff

வவுனியாவில் தனியார் பேரூந்து நடத்துனர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என தெரிவித்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். vavunia badulla bus conductor attack three person include bank staff

இவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று அதிகாலை 3.00மணியளவில் தனியார் பேரூந்து நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தரித்து நின்ற சமயத்தில் நடத்துனர் அதிகளவு கட்டணம் பெற்றுள்ளதாக தெரிவித்து நடத்துனர் மீது அப் பேரூந்தில் பயணம் மேற்கொண்ட தனியார் வங்கியின் உத்தியோகத்தர் , அரச உத்தியோகத்தர் உட்பட மூவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இத் தாக்குதலில் காயமடைந்த நடத்துனர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட மூவரையும் கைது செய்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
vavunia badulla bus conductor attack three person include bank staff

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites