காங்கேசன்துறை கடற்படை சிப்பாயை காணவில்லை

0
318
Kankesanthurai navy soldier missing

காங்கேசன்துறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படை சிப்பாயை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Kankesanthurai navy soldier missing

கந்தளாயை சேர்ந்த 25 வயதான பியந்த என்பவரையே காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிப்பாய் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னரே காங்கேசன்துறை கடற்படை முகாமில் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் கடற்படை முகாமில் இருந்து ஆயுதங்கள் எதுவுமின்றி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் முகாமுக்கு குறித்த சிப்பாய் திரும்பாததால் கடற்படையினர் அவரை தேடிய போது , சிப்பாய் கொண்டு சென்ற மோட்டார் சைக்கிள் தையிட்டி பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

அதனை தொடர்ந்து குறித்த சிப்பாயை காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் , கடற்படை முகாம் பொறுப்பதிகாரி முறைப்பாட்டை பதிவு செய்ததுடன், தம்மால் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

tags :- Kankesanthurai navy soldier missing

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites