ஆபத்தான நாடுகளின் பட்டியலில், இலங்கை 4 வது இடத்தில் – ஜனாதிபதி

0
395
dangerous countries Sri Lanka 4th President

உலகளாவிய ரீதியில் காலநிலை மாற்றத்தினால் ஆபத்து ஏற்படும் நாடுகளில் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். dangerous countries Sri Lanka 4th President

கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் காலநிலை மாற்றம் தொடர்பான பட்டியலில் இலங்கை 97 வது இடத்தில் இருந்தது. எனினும் தற்போது வெளியாகி உள்ள புதிய பட்டியலில் நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மோசடியாளர்களின் நாசகார செயற்பாடு காரணமாக நாட்டின் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது.

சமகாலத்தில் பூமியின் நிலப்பரப்பு பாலைவனமாக மாறி வருகிறது. இதன் காரணமாக நாளைய சந்ததியினருக்கு நீர் இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீருக்காக அலைந்து திரிய வேண்டிய அவல நிலை ஏற்படும். இதற்காக சுற்றுச்சூழலை பாதிப்படையச் செய்யும் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொல்பித்திகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

tags ;- dangerous countries Sri Lanka 4th President

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites