பிரபாகரனுக்கு எதிராக செயற்பட்டாரா விக்னேஸ்வரன்?

0
362
Vigneshwaran LTTE Leader Sentence

 

தமிமீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு 200 வருட சிறைத்தண்டனை வழங்குமாறு அப்போது நீதிபதிகளுக்கு ஆலோசனை வழங்கிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் இன்பராசா தெரிவித்துள்ளார் Vigneshwaran LTTE Leader Sentence

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ளதாவது:

இராணுவத்தினருடன் சேர்ந்து காட்டியுக் கூட்டியும் கொடுத்தவர்கள் நாங்கள் அல்ல டெலோ, புளொட் ,ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டீ.பி, கருணா, பிள்ளையான் போன்றவர்கள் தான், நாம் 2011 தான் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் , முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் முன்னால் போராளிகளை இராணுவப்புலனாய்வு என்று கூறியது தவறு.

இவர்தான் கடந்தகாலங்களில் தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு 200 வருட சிறைத்தண்டனை வழங்குமாறு அப்போது நீதிபதிகளுக்கு ஆலோசனை வழங்கியவர்

முன்னால் போராளிகள் அனைவருமே தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் தான் ஏன் இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற கட்சிகள் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டவர்களா?

இவர்களை அரசாங்கம் புனர்வாழ்வுக்கு உட்படுத்தவில்லை காரணம் இவர்கள் தமிழ் இனத்தின் போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்கள் இன்று இந்த நயவஞ்சகர்கள் எம்மை காட்டிக்கொடுத்த துரோகிகள் என்று கூறுகிநார்கள் பயங்கரவாத தடைச்சட்டம் என்பது தமிழ் ஈழவிடுதலைப்புலிகளுக்காகவே பிரத்தியேகமாக போடப்பட்ட சட்டம்.

இந்த தடைச்சட்டம் நீக்கப்படுமாக இருந்தால் தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கும் ஏனைய ஆயுதக்ட்சிகளுக்கும் நேரடியாகவே தமது அரசியல் பலத்தை இழந்து நடுவீதியில் நிற்கநேரிடும் விடுதலைப்புலிகள் பலம் பொறுவார்கள் மீண்டும் இவர்கள் டெலோ புளொட் ஈபி ஆர் எல் எப் ஈபி டீ பிஈ கருணா பிள்ளையான் போன்றவர்கள் அரசாங்கத்துடன் இனைந்து காட்டியும் கூட்டியும் கொடுக்கத்தான் சரி” என்றார்.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை