கோத்தபாய உள்ளிட்ட 7 பேரிற்கு எதிராக வழக்கு தாக்கல்

0
407
Case filed Special High Court Gotabaya 6 others

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேரிற்கு எதிராக விஷேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களுக்குரிய 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (Case filed Special High Court Gotabaya 6 others)

பாரிய ஊழல் மோசடிகளை விசாரிப்பதற்கான விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்ட பின் தாக்கல் செய்த வழக்காக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கு கருதப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையில் கோதாபய உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாக நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அவரின் அரசியல் பிரவேசக் கனவு தகர்ந்து போவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Case filed Special High Court Gotabaya 6 others,