நீரில் மூழ்கிய நபரை வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் விபத்தில் பலி

0
642
young man kills three wheeler accident

கலென்பிந்துனுவௌ பிரதேசத்தில் உள்ள திவுல்வௌ ஏரியில் நீராடச் சென்ற 17 வயது இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி, ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக கலென்பிந்துனுவௌ வைத்தியச்சாலைக்கு முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லும் போது, கலென்பிந்துனுவௌ நகர மத்தியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதால் நீரில் மூழ்கிய இளைஞன் உயிரிழந்துள்ளார். (young man kills three wheeler accident)

இந்த விபத்தின் போது, முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட்டுள்ளதாக கலென்பிந்துனுவௌ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் கலென்பிந்துனுவௌ, கெடலாவ பிரதேசத்தில் உள்ள தனது உறவினரின் இல்லத்திற்கு சென்ற போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் உடம்பில் காயங்கள் பல தென்பட்டதால் இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, வைத்தியர்கள் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; young man kills three wheeler accident