பிரித்தானியா பாடசாலையில் காணாமல் போன மாணவி மலைப்பகுதியில் சடலமாக மீட்பு !!

0
238
missing student British school corpse mountain tamil news

பிரித்தானியாவில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மாணவி 2 நாட்களுக்கு பின் மலைப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. missing student British school corpse mountain tamil news

ஸ்காட்லாந்தின் Stornoway அருகே Gravir என்ற கிராமத்தை சேர்ந்தவர் Hannah Mackenzie (17). அப்பகுதியில் செயல்பட்டு வரும் Nicolson பள்ளி நிறுவனத்தில் படித்து வரும் Hannah, விடுமுறை முடிந்து கடந்த வியாழக்கிமையன்று முதல்நாளாக பள்ளிக்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு திடீரென காணாமல் போன Hannah, நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவருடைய அம்மா பொலிஸாரிடம் புகார் அளித்தனர்.

இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிஸார், ஒருவேளை Hannah அவருடைய அம்மா வேலை செய்து வரும் மருத்துவமனைக்கு எதுவும் சென்றிருப்பாரோ என்ற கோணத்தில் விசாரித்தனர்.

மேலும் பள்ளி அமைந்திருக்கும் இடத்தை சுற்றிலும், சந்தேகத்திற்கு இடம் கொடுக்கக்கூடிய இடங்களிலும் ஹெலிகாப்டர் மற்றும் படகுகளின் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பள்ளி அமைந்திருக்கும் பகுதியில் உள்ள மலைப்பகுதி ஒன்றில் Hannah இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலை கண்டறிந்த பொலிஸார், பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில் Hannah-வின் நண்பர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், பள்ளியில் அவருக்கு எந்தவிதமான சம்பவங்களும் நிகழவில்லை எனவும், சமீபத்தில் அவளுடைய காதலனுடன் நட்பை முறித்துக்கொண்டதும் தெரியவந்துள்ளது.

இதனால் தற்போது Hannah-வின் காதலனிடமும் பொலிஸார் விசாரணையை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

tags :- missing student British school corpse mountain tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************