முதல்முறை இலங்கைக்கு விஜயம் செய்யும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்

0
424
Japanese Defense Minister insunori visiting Sri Lanka first time

(Japanese Defense Minister insunori visiting Sri Lanka first time)

ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு முதன்முறையாக விஜயம் செய்யவுள்ளார். கொழும்பிற்கான ஜப்பானியத் தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம், 22 ஆம் திகதி வரை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர், இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.

இவர் இலங்கையில் தங்கியிருக்கும் போது, ஜப்பான் – இலங்கை பாதுகாப்பு உறவுகள் தொடர்பாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன மற்றும் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அதேவேளை, கொழும்புக்கு வெளியே களப் பயணங்களை மேற்கொள்வதற்கும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

இந்தப் பயணம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான விரிவான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவியாக இருக்கும் என்று ஜப்பானிய தூதரகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

(Japanese Defense Minister insunori visiting Sri Lanka first time)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites