கீத் நொயாரைக் கடத்தியவர்களை மஹிந்தவுக்கு தெரியும்!

0
250

ஊடகவியலாளர் கீத் நொயாரைக் கடத்திச் சென்றவர்கள் யார் என்பது மகிந்த ராஜபக்சவுக்கு நன்றாகவே தெரியும் என இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். Mahinda Rajapaksa Knows Keeth Noyar Kidnap Persons Tamil News

மேலும் கீத் நொயாரை கொலை செய்யாமல் காப்பாற்றியதற்காக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நன்றி கூற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில் ,

“கீத் நொயாரைக் கடத்திச் சென்றவர்கள் அவரைக் கொலை செய்யவிருந்த நிலையில், மகிந்த ராஜபக்ச தலையிட்டுத் தான், அவரைக் காப்பாற்றினார். அவர் தலையிட்டதற்காக நாங்கள் நன்றி கூற வேண்டும்.

கீத் நொயார் உயிரைப் பாதுகாப்பதில் சபாநாயகர் கரு ஜெயசூரியவும் முக்கிய பங்காற்றினார்.

முன்னைய ஆட்சிக்காலத்தில் பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அது தான் அவர்களின் காலத்து ஊடக சுதந்திரம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites