வாஜ்பாய்யின் இறுதி சடங்கில் இலங்கை அரசின் பிரதிநிதிகள் பங்கெடுப்பு!

0
554

மூன்று தடவைகள் இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்த அடல் பிகாரி வாஜ்பாய் நேற்று புதுடெல்லியில் காலமானார். Prime Minister Ranil Sends Condolence Message Vajbai Funeral Tamil News

அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணியளவில் புதுடெல்லியில், யமுனை ஆற்றங்கரையில் நடைபெறவுள்ளது.

இந்த இறுதிச்சடங்கில் இலங்கை அரசாங்கத்தின் சிறப்புப் பிரதிநிதிகளாக அமைச்சர்கள் லக்ஸ்மன் கிரியெல்லவும், ரிஷாட் பதியுதீனும் பங்கேற்கவுள்ளனர்.

அதேவேளை, முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாயின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் செய்தி ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்.

அதில், “வாய்ஜ்பாயின் மரணம் ஆழ்ந்த துக்கத்தை தந்துள்ளது. அவர் சிறிலங்காவின் உண்மையான நண்பனாக இருந்தவர்.இலங்கையில் உறுதியான நிலையை ஏற்படுத்துவதில் அவர் முக்கிய பங்கை வகித்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites