யாழில் ஓடிக்கொண்டிருந்த காரில் ஏற்பட்ட பயங்கர சம்பவம்

0
846
car suddenly caught fire Jaffna

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை அரசடி பகுதியில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்ததில் காரில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். (car suddenly caught fire Jaffna)

இந்த நிகழ்வு நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இந்த விபத்து காரில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாகவே இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்பின்னர் சம்பவம் தொடர்பில் யாழ். மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு மக்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

எனினும் கார் முற்றாக தீயில் எரிந்துள்ளதாகவும் காரில் பயணித்தவர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ பிடித்தவுடனே காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதனால் ஆபத்தில் இருந்து உயிர் பிழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; car suddenly caught fire Jaffna