வவுனியாவில் தாயும் குழந்தையும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

0
686
Mother, child found dead vavuniya

வவுனியா கூழாங்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு அருகே தாயும் குழந்தையும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். (Mother, child found dead vavuniya)

இந்தச் சம்பவம் இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவன் வேலைக்கு சென்ற வேளையில், 5 வயது 7 வயதுடைய மகனுடன் தாயார் அயலவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், 5 வயதுடைய மகனையும் குறித்த தாயையும் காணவில்லை என அயலவர்கள் தேடியுள்ளனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த இருவரும் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளனர்.

33 வயதுடைய தாயும் 5 வயதுடைய குழந்தையுமே சடலமாக மீட்கப்பட்டதாகவும் இவர்களின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் மேலதிக விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவலை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிராம சேவையாளர் மற்றும் பண்டாரிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Mother, child found dead vavuniya