இந்தியன் ஒவ்வொருவருக்கும் ஓகஸ்ட் 15 புனிதமான நாள் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆசி

0
435
Indian Independence Day president ram nath govind addressing

(Indian Independence Day president ram nath govind addressing)

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனது சுதந்திர தின ஆசி உரையை வெளியிட்டுள்ளார்.

ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஒவ்வொரு இந்தியனுக்கும் புனிதமான நாள் என அவர் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றினார். அதில் அவர் கூறியதாவது:-

ஓகஸ்ட் 15-ம் திகதி ஒவ்வொரு இந்தியனுக்கும் புனிதமான நாளாகும், நமது நாட்டை மூவர்ணக்கொடி பிரதிபலிக்கிறது.

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பமாகவுள்ளதால், இந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு வழக்கத்துக்கு மாறான முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது. மகாத்மா காந்தி, கண்டம் விட்டு கண்டம் நினைவுகூரப்படும் மனிதராக திகழ்கிறார்.

அவர் இந்தியாவின் அடையாளம். அவரது அகிம்சை கொள்கை இன்றும் பொருத்தமாக உள்ளது. வன்முறையை விட அகிம்சைக்கு பலம் அதிகம் என்று அவர் உலகிற்கு காண்பித்தார். அவரது கொள்கைகளை நமது அன்றாட பணிகளில் பின்பற்ற வேண்டும்.

ராணுவ வீரர்களின் தியாகத்தினால் தான் நமக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றது, இன்றைய தினத்தில் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள் அனைவரையும் நினைவு கூறுகின்றேன்.
பாதுகாப்பு படை எப்போதும் தயார் நிலையில் உள்ளதால் நாட்டின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் வாழ்க்கையில் முன்னேற அவர்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பெண்கள், தாம் விரும்பிய வாழ்க்கையை வாழும் உரிமை பெற்றவர்கள். கல்வி பணி ஆகியவற்றில் பெண்கள் தங்களுக்கான பாதையை தேர்வு செய்ய நாம் அனுமதிக்க வேண்டும்.

நாடு அடைந்து வரும் வளர்ச்சியும், மாற்றத்தின் வேகமும் பாராட்டுக்குரியது. இந்தியா, அரசாங்கத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல, இந்திய மக்களுக்கும் சொந்தமானது என்று ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

(Indian Independence Day president ram nath govind addressing)

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :