உயிருடன் சவப்பெட்டியில் இருந்து நடத்திய போராட்டம் கைவிடப்பட்டது! (Video)

0
369
funeral box laying hunger strike called off agarapathana

(funeral box laying hunger strike called off agarapathana)

அக்கரபத்தனை பெருந்தோட்ட பகுதியில் லங்கெம் பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் இயங்கும் வேவர்லி தோட்டத்தில் முன்னால் தொழிற்சங்க தோட்ட கமிட்டி உறுப்பினர் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்தியாகிரக போராட்டம் தற்காலிகமாக நேற்று மாலை கைவிடப்பட்டுள்ளது.

குறித்த நபரினால் முன்வைக்கப்பட்டிருந்த சம்பளம் மற்றும் தனி வீடுகள் உள்ளடங்களாக பல கோரிக்கைகளை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோர் அரசாங்கத்திலும், பாராளுமன்றத்திலும் கவனத்திற்கு கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையை மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் ஆர்பாட்டகாரர்களிடம் நேரில் சென்று தெரிவித்ததையடுத்து இந்த ஆர்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு ஆதரவு தெரிவித்து குறித்த தோட்ட பகுதியில் 5 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று (14) ஆம் திகதி தலவாக்கலை டயகம பிரதான வீதியில் வேவர்லி தோட்டத்திற்கு அருகாமையில் போராட்டம் ஒன்றையும் நடத்தினர்.

 

கறுப்பு கொடிகளை எந்தி ஊர்வலமாக வந்த மக்கள் தமது உரிமைகள் தொடர்பான கோஷங்களை எழுப்பினார்கள். உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்ட இருவரை சவப்பெட்டியில் அமர்த்தி வீதியின் மருங்கில் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

நேற்று காலை முன்னெடுப்பட்ட போராட்டத்தின் போது தலவாக்கலை டயகம பிரதான வீதியின் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்தது.

அவ்விடத்திற்கு விரைந்த அக்கரப்பத்தனை பொலிஸார் வீதியினை மறித்து போராட்டத்தை முன்னெடுக்காதீர்கள் என தெரிவித்ததையடுத்து வீதியின் அருகில் போராட்டத்தை தொழிலாளர்கள் முன்னெடுத்தனர்.

இதன்போது தமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு சரியான உத்தரவாதம் ஒன்றை தருவதற்காக பொறுப்பு வாய்ந்தவர்கள் எவ்வாறாயினும் எமது மத்தியில் வந்து வாக்குறுதிகள் வழங்குவார்களாவின் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவிந்திருந்தனர்.

இதனையடுத்து போராட்ட இடத்திற்கு விரைந்த மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாக போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(funeral box laying hunger strike called off agarapathana)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites