இன்று பணிப்பகிஷ்கரிப்பு உறுதி! தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தின் அமைப்பாளர் தெரிவிப்பு!

0
536

எந்த தடை வந்தாலும் இன்று (15) நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட மாட்டாது என தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தின் அமைப்பாளர் யு.கே. குமார ரத்ன தெரிவித்துள்ளார். Today Bus Strike Confirmed Association leader Said Tamil News

வீதி ஒழுங்கு விதிகளை மீறும் பஸ் சாரதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டப் பணத்தைக் குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியே தனியார் பஸ் சாரதிகள் சங்கம் இன்று (15) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியள்ளார்.

ஆரம்பத்தில் பணிப்பகிஷ்கரிப்பு பற்றிய தகவல்கள் வெளிவந்த போதும் அது நடைமுறைப்படுத்த படாது என்று கூறப்பட்டிருந்தது.

எனினும் மீண்டும் தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தின் அமைப்பாளர் பகிஷ்கரிப்பு உறுதி என கூறியுள்ளார்.

அண்மையில் புகையிரத சங்க ஊழியர்கள் முன்னெடுத்த பகிஷ்கரிப்பு காரணமாக மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்திருந்த நிலையில் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு மூலம் பொதுமக்களே பெருமளவு பாதிக்கப்படுவர் என பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites