அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை ஆராய ஆணைக்குழு நியமனம்!

0
412

நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சினால் நேற்று (14) முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Government Staff Salary Problem Commission Appointed Tamil News

அதன்படி அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பில் ஆராய விசேட சம்பள ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக இவ்வாணைக்குழுவுக்கு இரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் சம்பள முரண்பாடு காரணமாக பல அரச கட்டமைப்புகளில் வேலை நிறுத்தம் தொடர்பான எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ள நிலையில் இந்த விசேட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites