டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் இந்தியா படுதோல்வியடைந்ததால், கவுதம் காம்பீர் இந்திய அணியை விமர்சித்துள்ளார். Gautam Gambhir Comment Indian Team
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2 வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியடைந்தது. இது இந்தியா சந்தித்துள்ள மோசமான தோல்வியாகும்.
இதுகுறித்து பேசிய கவுதம் காம்பிர், இந்த ஆட்டத்தில் இந்திய அணி விரர்கள், இங்கிலாந்து அணியை வீழ்த்த எந்த வித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்றே தெரிகிறது. இதனால் இந்தியாவை இங்கிலாந்து அணி வீரர்கள் அசால்ட்டாக தோற்கடித்துவிட்டனர்.
193 ஓட்டங்களைக் கூட நம்மால் அடிக்க முடியவில்லை. இந்த ஆட்டத்தில் தோற்றது கூட பரவாயில்லை ஆனால் இவ்வளவு மோசமாக தோற்றது தான் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இனி வரும் ஆட்டங்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடி, தோற்காமல் போட்டியை சமன் செய்யும் அளவிற்காவது இந்திய அணி வீரர்கள் விளையாட வேண்டும் என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.