ஹன்சிகாவின் 50வது பட அறிவிப்பு

0
224
Hansika 50th movie announcement tamil news

தன்னுடைய 50 ஆவது பட அறிவிப்பை நடிகை ஹன்சிகா தனது பிறந்தநாளான ஆக்ஸ்ட் 9ம் திகதி வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் அன்றைய தினம் வெளியாகாது என குறிப்பிட்டிருந்தார். Hansika 50th movie announcement tamil news

இந்தியில் வெளியான ஹவா படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி,  பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதுவரை 49 படங்களை முடித்துள்ள ஹன்சிகா, தற்போது தனது 50வது படத்தில் நடிக்கிறார். மஹா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜமீல் இயக்க. ஜிப்ரான் இசையமைக்கிறார்.

பல வருடங்களுக்கு முன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஓரிரு நாட்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் அஜித் நடித்த படத்துக்கு ‘மஹா’ என்று பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அப்படத்தில் அஜித் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Hansika 50th movie announcement tamil news

எமது ஏனைய தளங்கள்