ஞான சாரரின் இதயத் துடிப்பு வேகத்தில் பிரச்சினை: சத்திரசிகிச்சை பிற்போடப்பட்டுள்ளது

0
462
Galagoda Aththe Gnanasara Thero jayawarna hospital

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரக்கு இன்று செய்யப்படவிருந்த சத்திரசிகிச்சையானது பிற்போடப்பட்டுள்ளது.(Galagoda Aththe Gnanasara Thero jayawarna hospital,News, News, Tamil web news, Tamilnews,)

ஞான சாரரின் இதயத் துடிப்பு வேகத்தில் பிரச்சினைக் காணப்படுவதால், அவருக்கான சத்திரசிகிச்சை இன்று மேற்கொள்ளப்படவில்லையென, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் பிரபாத் வேரவத்த தெரிவித்துள்ளார்.

விசேட வைத்தியர் குழுவினரால் ஞானசாரரின் இதயத்துடிப்புத் தொடர்பில் 48 மணிநேரம் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னரே அவரது சத்திரசிகிச்சைக்கான திகதி குறிப்பிடப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Tags:Galagoda Aththe Gnanasara Thero jayawarna hospital,News, News, Tamil web news, Tamilnews,