மருந்து தொண்டையில் சிக்கி 2 வயது சிறுமி பலி

0
273
2 year old girl killed medicine stuck throat 

மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதால் 02 வயது 09 மாதமுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். (2 year old girl killed medicine stuck throat)

சளி நோயினால் பாதிக்கப்பட்டு, பேராதெனிய சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி ஒருவரின் தொண்டையில் மருந்தின் அரைவாசி பகுதி சிக்கியதால் உயிரிழந்துள்ளதாக மாவனெல்ல வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

மொஹமட் அஸ்லம் அயினா என்ற 2 வயது 09 மாதமுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி இரவு மாத்திரையை இந்த சிறுமியின் தாயார் பருகக் கொடுத்துள்ளார்.

இந்த சிறுமிக்கு இறுமல் ஏற்பட்டுள்ளதோடு, உடனடியாக மூச்சுத் திணரல் ஏற்பட்டு, அந்த இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளது என்றும் மாவனெல்ல தள வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.

திடீர் மரண பரிசோதகர் நடத்திய மரண விசாரணையில் சுவாசக் குழாயில் வெளிப்பொருள் தடைப்பட்டதால் இந்த குழந்தை உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 2 year old girl killed medicine stuck throat