சகோதரருக்கு இடையில் வாய்த்தர்க்கம்; பொல்லால் தாக்கி ஒருவர் பலி

0
602
warakapola murder argument brother

வறக்காப்பொல பிரதேசத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். (warakapola murder argument brother)

சகோதரர் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறி பொல்லால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சகோதரனால் பொல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்த மற்றைய சகோதரரை வறக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தொலங்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய ரோகண குமார என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வறகாப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; warakapola murder argument brother