அமெரிக்காவின் ஒரு நகரத்தில் தனித்து வாழும் பெண் – (வீடியோ உள்ளே).

0
333
Woman city US Video insido tamil news

அமெ­ரிக்­கா­வின் நெப்­ராஸ்கா மாகா­ணத்­தில் இருக்­கி­றது மோனோவிஎனும் நகரம் . இந்த நக­ரில் 2010ஆம் ஆண்டு முதல் ஒரே­யொரு வீடு மட்­டுமே இருந்து வரு­கி­றது. இந்த வீட்­டி­லும் ஒரே­யொரு மனி­தர்­தான் வசித்து வரு­கி­றார். 84 வயது எல்சி எய்­லர் என்ற பெண்­தான் இந்த நக­ரின் ஆளு­நர், கணக்­கா­ளர், பொரு­ளா­ளர், நூல­கர், உண­வ­கம் நடத்­து­ப­வர் என அனைத்­து­மாகவுள்­ளார். Woman city US Video insido tamil news

ஒவ்­வொரு ஆண்­டும் இந்த நக­ருக்கு ஆளு­நர் தேர்­தல் நடை­பெ­று­கி­ன்றது. தானே தேர்­த­லில் நின்று, தானே வாக்குப் போட்­டுக்­கொள்­கின்­றார் இவர்!

இந்த நக­ருக்­குத் தேவை­யான வீதி, மின்­சா­ரம், தண்­ணீர் போன்ற வச­தி­களை அர­சி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­கின்­றார். ஆண்­டுக்கு 32 ஆயி­ரம் ரூபாய் வரி செலுத்­து­கின்­றார். அரச ஆவ­ணங்­க­ளில் இது யா­ரு­மற்ற ‘பேய் நக­ரம்’ என்று எழுத விடா­மல் தடுக்­கும் பணி­க­ளில் ஈடு­பட்டு வரு­கி­ன்றார்.

‘1930ஆம் ஆண்டு மோனோ­வி­யில் 150 பேர் மட்­டுமே வசித்த கார­ணத்­தால் ரயில் சேவை நிறுத்­தப்­பட்­டுள்ளது. அப்­போது 3 மளி­கைக் கடை­கள், சில உண­வ­கங்­கள், சிறைச்­சாலை இருந்­தன. பின்­னர் இந்த நக­ரம் கொஞ்­சம் கொஞ்­ச­மா­கச் சரி­வைச் சந்­திக்க ஆரம்­பித்­தது. இங்­குள்­ள­வர்­கள் பெரு நக­ரங்­க­ளைத் தேடிச் செல்ல ஆரம்­பித்­து­விட்­ட­னர். 1960ஆம் ஆண்டு இங்­கி­ருந்த தேவா­ல­யத்­தில் என் அப்­பா­வின் இறு­திச் சடங்­கு­தான் கடை­சி­யாக நடத்­தப்­பட்­டது. அதற்­குப் பிறகு தபால் நிலை­யம், மளி­கைக் கடை­கள், பள்­ளிக்­கூ­டம் எல்­லாம் வரி­சை­யாக மூடப்­பட்­டன.

1980ஆம் ஆண்டு நக­ரின் மக்­கள் தொகை 18ஆக இருந்­தது. 20 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு நானும் என் கண­வ­ரும் மட்­டுமே எஞ்­சி­யி­ருந்­தோம். 2004ஆம் ஆண்டு கண­வ­ரும் மறைந்­து­விட்­டார். 14 ஆண்­டு­க­ளாக நான் மட்­டும் வசித்து வரு­கி­றேன். நான் ஒரு­போ­தும் தனி­மையை உணர்ந்­த­தில்லை. வாரத்­தில் 6 நாட்­க­ளும் உண­வ­கத்­தைத் திறந்து வைத்­தி­ருப்­பேன். காலை 9 மணிக்கு உண­வ­கத்­தைத் திறந்­தால் இரவு 9 மணிக்­கு­தான் மூடு­வேன்.

என் கண­வ­ரின் தனிப்­பட்ட சேமிப்­பான 5 ஆயி­ரம் புத்­த­கங்­களை வைத்து, ஒரு நூல­கத்தை நடத்தி வரு­கி­றேன். மது அருந்­து­ப­வர்­கள், உணவு சாப்­பி­டு­ப­வர்­கள், நூல­கத்­துக்கு வரு­கி­ற­வர்­கள் என்று சுற்­று­லாப் பய­ணி­கள் வந்­து­கொண்டே இருப்­பார்­கள். பெரும்­பா­லா­ன­வர்­கள் எனக்கு நன்கு அறி­மு­க­மா­ன­வர்­கள். நான்­காம் தலை­மு­றை­யைச் சேர்ந்த வாடிக்­கை­யா­ளர்­க­ளும் எனக்கு உண்டு.

ஒரே மனி­தர் வசிக்­கும் நக­ரம் என்று மோனோவி பெயர் பெற்­று­விட்­ட­தால், உல­கம் முழு­வ­தி­லு­மி­ருந்­து­ கூட மக்­கள் வரு­கி­றார்­கள்.விருந்­தி­னர் புத்­த­கத்­தில் ஏரா­ள­மா­ன­வர்­க­ளின் கையொப்­பங்­கள் இருக்­கின்­றன. இங்­கி­ருப்­பதே எனக்கு நிறை­வா­க­வும் மகிழ்ச்­சி­யா­க­வும் இருக்­கி­றது” என்­கி­றார் எல்சி எய்­லர்.

tags :- Woman city US Video insido tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்