நீதிமன்ற கோட்பாடுகளுக்கமைய சுயாதீனமாக சேவையாற்ற வேண்டும் – பிரதம நீதியரசர் 

0
279
CJ Priyasath Deb said everyone courts work independently

(CJ Priyasath Deb said everyone courts work independently)

நீதிமன்றத்தில் பணியாற்றும் அனைவரும் நீதிமன்ற கோட்பாடுகளுக்கு உட்பட்டு சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்று பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தெரிவித்துள்ளார்.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மூலம் இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (11) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வழங்குகளை மக்களின் நலன்கருதி தாமதப்படுத்தாமல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

அத்துடன், வழக்குகளை சுயாதீனமான நடத்த வேண்டும் எனவும் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கையில் சகல நீதிமன்ற கட்டிடத் தொகுதிகளும் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் பிரதம நீதியரசர் தெரிவித்தார்.

(CJ Priyasath Deb said everyone courts work independently)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites