Whatsapp செயலி பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சித் தகவல்!!

0
432
Researchers revealed shocking information possible Whatsapp hacking

(Researchers revealed shocking information possible Whatsapp hacking)

Whatsapp செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் குறுந்தகவல்களை Hack செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

Whatsapp செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் நோக்கில் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்யும் போது ஃபார்வேர்டெட் (forwarded) லேபெல் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் Whatsapp செயலியின் பாதுகாப்பை மேம்படுத்த அந்த நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.

அதன்படி செக்பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களில் Whatsapp செய்திகளை ஹேக்கர்கள் படிப்பதுடன் அவற்றை மாற்றவும் முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது புதிய பிழையானது செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்களை இடைமறித்து, அவற்றை மாற்றியமைக்க வழி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் குழு கருத்தாடல்கள் உள்ளிட்டவற்றுக்கும் இது பொருந்தும்.

Whatsapp செயலியில் கண்டறியப்பட்டுள்ள புதிய பிழை, மூன்று வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஹேக்கர்கள் பயனர் அனுப்பும் பதிலை மாற்ற முடியும்.

குழுவில் இருக்கும் ஒருவர் அனுப்பியதாக தகவல் ஒன்றை அனுப்ப முடியும். இது குழுவில் இருக்கும் மற்றவர்களுக்கு குறிப்பிட்ட பயனர் அனுப்பியதாகவே தெரியும். தனிப்பட்ட உரையாடல் ஒன்றை குழு கருத்தாடலில் காண்பிக்க செய்ய முடியும்.

(Researchers revealed shocking information possible Whatsapp hacking)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites