ஞானசார தேரரை பொதுமன்னிப்பு வழங்கி ஜனாதிபதி விடுவிக்க வேண்டும், இல்லையேல் அது தேசிய குற்றம்!

0
408
President must pardon Gnanasara Thero Iththekande Saddhatissa Thero

(President must pardon Gnanasara Thero Iththekande Saddhatissa Thero)

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரசாங்கமும் ஜனாதிபதியும் நேரடியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள முடியும் என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி விரும்பவில்லை என்றால், அது குறித்து இரண்டு முறை சிந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

பௌத்த மதகுரு ஒருவர் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியோ, கொள்ளையில் ஈடுபட்டிருந்தாலோ ஜனாதிபதியிடம் பொது மன்னிப்பு வழங்குமாறு கோர மாட்டோம்.

எனினும், நாட்டுக்காகவும் இனத்திற்காகவும் படையினருக்காகவும் குரல் கொடுத்த ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவில்லை என்றால் அது தேசிய குற்றமாக கருதப்படும்.

ஜனாதிபதியை பொது மன்னிப்பை வழங்கும் நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

(President must pardon Gnanasara Thero Iththekande Saddhatissa Thero)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites