திருமணத்திற்காக ATM ஐ உடைத்து பணம் கொள்ளையிட்டவர் பிணையில் விடுதலை!

0
357
bank atm robbery suspects wedding function negombo tamil news

(bank atm robbery suspects wedding function negombo tamil news)

திருமணத்திற்காக வங்கியிலிருந்த தன்னியக்க பண பறிமாற்ற இயந்திரத்தை உடைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் மூன்று மாதங்களின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க பண பறிமாற்ற இயந்திரத்தில் பணத்தை கொள்ளையிட்ட போது, இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் கடந்த மூன்று மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர்களை முன்னிலைப்படுத்திய போது 15 லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரின் திருமண நிகழ்வை ஏற்பாடு செய்வதற்காக பணம் இல்லாமையினால் கொள்ளையில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதற்காக ஏரிஎம் இயந்திரத்தை உடைத்து 47 லட்சத்து 70 ஆயிரம் ரூபா பணத்தை அவர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.

பிணையில் விடுவிக்கப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், நீர்கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(bank atm robbery suspects wedding function negombo tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites