சஜித் – விமல் வீரவன்ச கடும் வாய்த் தர்க்கம் – நாடாளுமன்றில் சண்டைபோட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என சபாநாயகர் எச்சரிக்கை

0
577
sajith premadasa wimal weerawansa battle parliament housing fraud

(sajith premadasa wimal weerawansa battle parliament housing fraud)

முன்னாள் வீடமைப்பு மற்றும் பொறியியல் துறை அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும், இன்னாள் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துதறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்குமிடையில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கடும் வாய்த்தர்க்கம் இடம்பெற்றது.

விமல் வீரவன்ச நிர்மாணித்த பல வீடுகள் அவரது உறவினர்களுக்கே வழங்கப்பட்டதாக அமைச்சர் சஜித் பிரேமதாச குற்றம்சுமத்தியதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவேன் என விமல் வீரவன்ச கூறியபோது, எனது குற்றச்சாட்டு பொய்யாக இருக்கும் பட்சத்தில் அமைச்சுப் பதவியை துறப்பேன் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதன்போது கருத்து முரண்பாடு தொடர்ந்த வண்ணம் இருந்த தருணத்தில், சபாநாயகர் கரு ஜெயசூரிய குறுக்கி்ட்டு, இன்னாள் அமைச்சரும் முன்னாள் அமைச்சரும் சிறு பிள்ளைகள் போன்று சண்டை போட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று எச்சரித்தார்.

உங்களின் தனிப்பட்ட காரணிகளை கூறும் இடம் இதுவல்ல. நாடாளுமன்றில் முக்கியமான சட்டமூலங்கள் விவாதத்திற்கு எடுக்கவேண்டியுள்ளது. ஆகவே காலத்தை வீணடிக்க வேண்டாம் என கூறினார்.

எனினும் இதன் பின்னரும் விமல் வீரவன்சவும் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் தொடர்ச்சியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(sajith premadasa wimal weerawansa battle parliament housing fraud)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites