தேசிய அடையாள அட்டைக்கு அறவிடும் கட்டணம் அதிகரிப்பு

0
629
national identity card

தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பொழுது அறவிடும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆட்பதிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.(national identity card,Tamilnews)

அதன்படி, மூன்று ரூபாவாக இருந்த தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் பொழுது அறவிடப்படும் கட்டணம் நூறு ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, 15 ரூபவாக இருந்த தேசிய அடையாள அட்டையில் திருத்தத்தை மேற்கொள்ளும் போது அறவிடப்படும் கட்டணம் 250 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.

மேலும், 15 ரூபவாக இருந்த மீண்டும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் போது அறவிடப்படும் கட்டணம் 500 ரூபவாக அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த புதிய கட்டணம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ள அதேவேளை, புதிய கட்டண முறை செப்டெம்பர் முதலாம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த கட்டணம் இறுதியாக 1980ம் ஆண்டில் திருத்தப்பட்டதாக ஆட்பதிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

அவ்வழியாக வாகனத்தில் செல்வோரும், தகவல் அறிந்து குறித்த பகுதியில் தேடுதல் நடத்தி தங்கம் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags:national identity card,national identity card,