மனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ!

0
312
Canada Saudi Arabia human rights issue tamil news

மனித உரிமைகளை மீறும் உலக நாடுகளின் செயற்பாடுகளை சுட்டிக்காட்ட கனடா ஒருபோதும் பின்வாங்காதென பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். Canada Saudi Arabia human rights issue tamil news

கனேடிய பிரதமர், சவூதி அரேபியாவின் மனித உரிமை விடயத்தில் கனடாவுடனான முரண்பாட்டு நிலையை சுட்டிக்காட்டினார். அத்துடன், உலக நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான அறிக்கைகளை அவதானித்த வண்ணமுள்ளதாகவும் உரிமை மீறல்கள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அதனை சுட்டிக்காட்ட தயங்கமாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பிரதமர், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், கனடாவானது மனித உரிமைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் நாடென்பது அனைவரும் அறிந்ததாகும். கனடா மக்கள் மட்டுமன்றி உலக நாடுகளும் அதனையே விரும்புகின்றது.

மனித உரிமை விவகாரத்தில் உலக நாடுகளின் தலைமை நாடாக விளங்கும் கனடா, அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணவே விரும்புகின்றது. எனினும் மனித உரிமைகளை மீறுமிடத்து குறித்த நாட்டிற்கு அழுத்தம் கொடுக்குமென ட்ரூடோ குறிப்பிட்டிருந்தார்.

கனடாவின் வெளிவிவகார அமைச்சர் கிரிஷ்டியா ஃப்ரீலான்ட், சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து நேற்று முன்தினம் நீண்டநேர பேச்சுவார்த்தையொன்றை நடத்தினார். எனினும் அது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லையென்றும் கனேடிய பிரதமர் தெரிவித்தார்.

மேலும், சவூதி அரேபியா, அந்நாட்டு சமூக செயற்பாட்டாளர்களை சிறையிலிட்டமை தொடர்பில் கனடா எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, கனடாவுடனான தொடர்புகள் அனைத்தையும் சவூதி இடைநிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

tags :- Canada Saudi Arabia human rights issue tamil news

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்