பிரான்ஸில், ரயிலை தடம்புரள செய்த சிறுவர்கள்!

0
255
France children stormTER train tamil news

TER ரயில் ஒன்றை தடம்புரளச்செய்ய முற்பட்ட இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், முறையே 9 மற்றும் 11 வயதுடையவர்கள் என தெரிய வந்துள்ளது. ( France children stormTER train tamil news)

இச்சம்பவம், நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை Ambarès-et-Lagrave நகரில் இடம்பெற்றுள்ளது. Bordeaux-Libourne நோக்கி செல்லும் ரயில் பாதை, தண்டவாளத்தில் சீமெந்திலான பெரும் கல் ஒன்றை கொண்டுவந்து சிறுவர்கள் போட்டுள்ளனர்.

ரயில், பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில் குறித்த கல்லில் மோதியது. உடனடியாக சுதாகரித்துக்கொண்ட ரயில் சாரதி, தொடரூந்தை நிறுத்தியுள்ளார். இதனால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், TER ரயில் 30 நிமிட போக்குவரத்து தடையை சந்தித்தது. இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் 9 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்களை கைது செய்துள்ளனர். அதன் பின்னர் அவர்களை காவல்நிலையத்தில் வைத்திருக்க முடியாது என்பதால் மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

tags :- France children stormTER train tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
“நான் இருக்கணும். இல்ல அவங்க இருக்கலாம். எனக்கு இந்த வீட்டை விட்டு போகணும்” விளாசும் ஐஸ்வர்யா!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
பிரான்ஸில், தேவாலயத்தில் நுழைந்து பாதிரியாரின் கழுத்தை அறுத்த பயங்கரவாதி!
பிரான்ஸில் திருடனை பிடிக்க சென்ற பொலிஸார் பறி கொடுத்தவரை கைது செய்த விநோத சம்பவம்!

எமது ஏனைய தளங்கள்