ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு எதிரொலி! பொது போக்குவரத்து சட்டங்கள் அதிரடியாக நீக்கம்!

0
453

பொது பஸ் போக்குவரத்துச் சேவைக்கான பாதை அனுமதிப் பத்திரம் இல்லாமல் தேவையான எல்லாப் பாதைகளிலும் பொது மக்கள் போக்குவரத்துக்காக பஸ்களைப் பயன்படுத்துவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கும் விசேட அறிவித்தல் ஒன்றை நிதி அமைச்சர் மங்கள சமரவீர விடுத்துள்ளார். Public Transport Rules Temporarily Removed Manage Railway Strike Tamil News

அதேபோன்று, ரயில் போக்குவரத்துக்காக வழங்கப்பட்டுள்ள சீசன் டிக்கெட்டுக்களைப் பயன்படுத்தி, இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களில் இலவசமாக பயணிக்க முடியும் எனவும் அமைச்சர் அவ்வறிவித்தலில் கூறியுள்ளார்.

முன்னறிவித்தல் இன்றி ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை காரணமாக பயணிகள் முகம்கொடுத்துள்ள அசௌகரியங்களை கருத்தில் கொண்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த பணிப்பகிஷ்கரிப்புக்காக அரசாங்கம் தனது கவலையைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites