மன்னார் மனித புதைகுழி பகுதியில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு! இருட்டடிப்பு வேலையா?

0
661

மன்னார் கட்டிட நிர்மாணப்பணிக்கு ஒதுக்கப்பட்ட ‘சதொச’ பூமியில் மண் அகழ்வு செய்யும் போது மனித எச்சங்கள் சில காணப்பட்டதுடன் அது சம்மந்தமாக நிபுணர்களின் மதிப்பறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளுவதற்கான அகழ்வுப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றது. Mannar Human Bones Excavation Media Coverage Restricted Tamil News

இந்த அகழ்வு பணிகளை புகைப்படம் எடுப்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், தொலைக்காட்சி, அச்சு மற்றும் சமூக வலையமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊடகவியலாளர்கள் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அகழ்வு சம்மந்தமாக மேற்கொள்ளப்படும் புலனாய்வு நடவடிக்கை பூர்த்தி செய்யாததாலும், இந்த புலனாய்வில் உள்ள முக்கியத்துவம் கருதி இடையூறுகள் இல்லாமல் தொடர்ந்து புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காகவும் அகழ்வு மேற்கொள்ளப்படும் பூமியில் சகல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், தொலைக்காட்சி, அச்சு மற்றும் சமூக வலையமைப்புக்கள் அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான அதிகாரியின் உறிய அனுமதி இன்றி எந்த ஒரு வெளி நபர்களுக்கும் குறித்த பூமிக்கு உற்பிரவேசித்தல், புகைப்படம் எடுத்தல், ஒளிப்பதிவு செய்தல் மற்றும் அகழ்வு சம்மந்தமாக கலந்துரையாடலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித எச்சங்கள் சம்மந்தமாக நிபுணர்களின் மதிப்பறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளுவதற்கான அகழ்வுப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites