முதலமைச்சர் விக்கினேஸ்வரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு!

0
546

எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனையும் இரண்டு மாகாண அமைச்சர்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. Court Order North Provincial Chief Minister CV Vigneswaran Tamil News

வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் தாக்கல் செய்துள்ள மனுவொன்றை பரிசீலித்தபோதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வட மாகாண மீன்பிடி,போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட பா,டெனீஸ்வரனுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவாகியிருந்தன. இதனையடுத்து இவர் பதவி நீக்கப்பட்டதையடுத்து அந்த அமைச்சு வட மாகாண முதலமைச்சரினால் திணைக்கள ரீதியாக பிரித்து வழங்கப்பட்டது.

எனினும், அமைச்சு பதவியில் இருந்து தன்னை நீக்கிய விதம் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து பா.டெனீஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார்.

பதவியிலிருந்து பா.டெனிஸ்வரனை நீக்கியமையை தடை செய்து கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, தான் வகித்த அமைச்சுப் பொறுப்புக்களையும் அது சார் ஆவணங்களையும் உடனடியாக தன்னிடம் மீண்டும் வழங்குமாறு கோரி கடந்த ஜூன் மாதம் 7 ஆம் திகதி வட மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் வடமாகாண முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த மேன்முறையீட்டு மனு ஜூலை மாதம் 9 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, இடைக்கால தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரை நீடித்திருந்தது.

அமைச்சர் டெனீஸ்வரனின் மேன்முறையீடு தொடர்பில் ஆட்சேபனை இருப்பின் ஜூலை 23 ஆம் திகதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு வட மாகாண முதலமைச்சர், பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இந்நிலையில், வட மாகாண அமைச்சரவையைக் கூட்டுவதில் பல்வேறு இழுபறிகள் காணப்பட்டதுடன், தனது அனுமதியின்றி வட மாகாண அமைச்சரவையைக் கூட்ட வேண்டாம் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது .

வட மாகாண சபையின் பதவிக்காலம் இந்த வருடம் ஒக்டோபர் 25 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மற்றும் இரண்டு அமைச்சர்களுக்கு செப்டம்பர் 7 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது…

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites