வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் ஒரு போதும் அகற்றப்பட மாட்டாது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். (Military camps North East not removed)
அத்துடன், தொடர்ச்சியான மீளாய்வுகள் மூலம் விடுவிக்கப்படாத மக்களிக் காணிகளை இனங்கண்டு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.
இராணுவம் மேற்கொள்ளும் காலத்திற்கேற்ற மறுசீரமைப்பு பணிகளை சில குழுக்கள் வடக்கு கிழக்கில் இருந்து முகாம்களை அகற்றும் நடவடிக்கை என பிழையாக சித்தரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இராணுவத்தின் குழுக்களை ஒருங்கிணைப்பு செய்யும் நடவடிக்கைகளே இடம்பெறுவதாகவும் இந்த மறுசீரமைப்பு அனைத்து படை பிரிவிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இது இராணுவத்திற்கு மாத்திரமே புரிகின்ற விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையே சில குழுக்கள் இராணுவ குறைப்பு என்றும் முகாம்கள் அகற்றப்படுதல் என்றும் பிழையாக தகவல் பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புக்கள் திருட்டுத்தனமாக பதிவு
- கன்னித் தமிழ் உள்ள வரை கலைஞர் புகழ் நிலைத்திருக்கும் – அமைச்சர் திகாம்பரம்
- ஞானசாரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று
- மசாஜ் நிலையங்களில் விபசாரம் ; 16 இளம் பெண்கள் கைது
- பெண்ணும் மூன்று கணவர்மார்களும் சேர்ந்து பிள்ளைகளுக்கு செய்த கேவலமான செயல்; இலங்கையில் பதிவான சம்பவம்
- தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு மலையகத்தில் அஞ்சலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- சீதுவை கத்தோலிக்க தேவாலயத்தில் திருட்டு; பொலிஸில் முறைப்பாடு
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Military camps North East not removed